என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூதாட்டி மரணம்"
தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிளியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.
இந்தநிலையில் கிளி ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை வள்ளியம்மாள் பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்றார். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். இதற்குள் வள்ளியம்மாள் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் வள்ளியம்மாளை கிராம மக்கள் மீட்டனர்.
அப்போது அவர் இறந்திருப்பது தெரிந்தது. இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பலியான வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவித்து வருகின்றனர்.
வெயில் கொடுமையால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேடசந்தூர் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை (வயது80). ஓய்வு பெற்ற வயர்மேன். கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்ததுபோல் சுற்றிதிரிந்துள்ளார். திடீரென பிச்சை மாயமானார்.
அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் வடமதுரை சாலையில் உள்ள காலி இடத்தில் பிணமாக கிடந்தார். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பிச்சை இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அய்யலூர் அருகே சங்கிலிகரடு மலை அடிவாரத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்துள்ளார். அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது அவர் பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என தெரிய வந்தது. மலைப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சுட்டெரித்த வெயிலால் மயங்கி மலைப்பகுதியிலேயே இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மன்னார்குடி:
கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாமில் கடந்த 9 நாட்களாக தங்கி உள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோமாளபேட்டை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி உள்ளனர். இந்த முகாமில் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் மனைவி பக்கிரிஅம்மாள் (வயது85) என்பவரும் தங்கி இருந்தார்.
கூலித் தொழிலாளியான இவரது கூரை வீடு புயலால் இடிந்து விட்டதால் 9 நாட்களாக முகாமில் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அவர் 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பக்கிரி அம்மாள் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இறந்து விட்டார்.
இதையடுத்து முகாம் பணியை பார்வையிட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அவரது மகள் மல்லிகா என்பவர் கோட்டூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #Gajastorm
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கீழக்குத்தகையைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பார்வதி (வயது 61). அதே பகுதியில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பில் பண்ணைக் குட்டை வெட்டும்பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நூறுநாள் வேலை திட்டப்பணியில் பார்வதியும் நேற்று மண்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பண்ணைக்குட்டையிலேயே பார்வதி மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட ஒன்றிய ஆணையர் தியாகராஜன், இறந்த பார்வதியின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி ரூ.25 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் பார்வதி பண்ணைக்குட்டை பணியில் மயங்கி விழுந்தபோது 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. அருகில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முயற்சி செய்தபோது அங்கும் பணியில் யாரும் இல்லை என தெரியவந்தது. இதனால் முதலுதவி செய்ய முடியாமல் மூதாட்டி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகேயுள்ள கீழகரம்பவிளையை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ஞானம்மாள்(வயது70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தங்கராஜ் இறந்துவிட்டார். இதனால் ஞானம்மாள் மகன்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஞானம்மாள் திருச்செந்தூர் ஆவுடையார்குளம் பகுதியில் விறகு பொறுக்க சென்றார்.
அப்போது அங்கு கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் அவரை தாக்கின. இதில் பலத்த காயம் அடைந்த ஞானம்மாள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ஞானம்மாள் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுநகர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி குப்பம்மாள் (70).
சம்பவத்தன்று இவர் தவளக்குப்பம் மார்க் கெட்டுக்கு வந்தார். அங்கு பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்ப தயாரானார். அப்போது பலத்த மழை மற்றும் சூறை காற்று காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் குப்பம்மாள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குப்பம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட குப்பம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை குப்பம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்